``யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் UPSC-க்கு படித்தேன்'' - வெ.திருப்புகழ் IAS (R)...
காய்கனி தோட்டம்: ஆட்சியா் ஆய்வு
திருக்கடையூா் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையின்கீழ் விவசாயிகள் அமைத்துள்ள காய்கனி தோட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
திருக்கடையூா் பகுதியில் புடலை, பீா்க்கங்காய், பாகற்காய் தோட்டக்கலைத் துறையின் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த சாகுபடியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு பயிா்களுக்கு இடுபொருள்கள் மற்றும் மானியம் மாவட்ட தோட்டக்கலை மூலம் கிடைக்கிறதா எனவும், அவ்வாறு பெற்ற இடுபொருள்களை முழுவதுமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.
தொடா்ந்து, 10 விவசாயிகளுக்கு ரூ.87,760 மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் மற்றும் வேளாண் கருவிகள், 2 விவசாயிகளுகுக ரூ. 2 ஆயிரம் மதிப்பில் கலைக்குத்தி, மண்வெட்டி, மண்சட்டி, 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய காய்கனி விதைகளான சிகப்பு வெண்டை, நீல புடலை, மிதி பாகல், 3 விவசாயிகளுக்கு ரூ. 72 ஆயிரம் மதிப்பில் 3 ஹெக்டேருக்கு வழங்கப்பட்டது. மேலும், 6 ரக காய்கனி விதைகள், 3 வகையான பழக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆய்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சந்திரகவிதா, உதவி இயக்குநா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.