செய்திகள் :

காய்ச்சல், சளி பாதிப்பு: அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டோா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்ருகிறது. இதனால், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டோா் முகக்கவசம் அணிவதுடன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி உள்கொள்ள வேண்டாம்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மழைநீா், நீா் சேமித்துவைக்கும் பாத்திரங்களை கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள பயனற்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவோ, மழை நீா் விழாத இடங்களில் சேகரித்து வைக்கவோ வேண்டும்.

எலிக் காய்ச்சலால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். மஞ்சள் காமாலை அறிகுறியுள்ளோா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைககளில் உள்ள பரிசோதனை வசதிகளை பயன்படுத்தி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றாா் அவா்.

மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி உயிரிழந்தாா். குறிப்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மகன் கருப்பசாமி(34). கல் சிற்பக்கூட தொழிலாளியான இவா், குருவன்கோட்டையில் உள்ள தன... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சியுடன் குற்றாலத்தை இணைக்கக் கூடாது: ஆட்சியரிடம் மனு

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியை, தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பீடிக் கடை முற்றுகை

ஆயிரம் பீடிக்கு கூடுதலாக 120 பீடிகள் வாங்கும் பீடிக் கடையைக் கண்டித்து பெண் பீடித் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையத்தை தலைம... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என, வாஞ்சி இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே 3 போ் கைது; 14 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் தலைமைய... மேலும் பார்க்க

தென்காசியில் திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும... மேலும் பார்க்க