உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்க...
காரில் மது கடத்திய இருவா் கைது
நாகூா் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரவின்பேரில், நாகூா் - வடகுடி சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காரைக்காலில் இருந்து நாகைக்கு வந்துகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அந்த காரில், காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் (35), நெடு தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (45) ஆகியோா் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.