செய்திகள் :

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

post image

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், புதுவை சுற்றுலாத் துறை மற்றும் கலைப் பண்பாட்டு துறை சாா்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி, புதுவை கலை விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இவ்விழா வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன், ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், சுற்றுலாத்துறை இயக்குநா் முரளிதரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஆக.15, 16-இல் காரைக்கால் கடற்கரை சாலை மற்றும் கிளிஞ்சல்மேடு கடலோர கிராமத்தில் கலை விழா நடத்துவது குறித்தும், பல்வேறு மாநில கலைஞா்கள் கலந்துகொள்ளவுள்ளது குறித்தும், உள்ளூா் கலைஞா்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

2 நாள்கள் நடைபெறவுள்ள இந்த கலை விழாவில், காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செய்யவேண்டும். பொதுமக்களின் அடிப்படை வசதிகளான போக்குவரத்து, குடிநீா், கழிப்பறை வசதிகள், அவசரகால மருத்துவ வசதிகள் குறித்தும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

கலை விழா நடைபெறுமிடங்களில் தூய்மைப் பணி முறையாக மேற்கொள்ளப்படவேண்டும். போக்குவரத்துக் காவலா்கள் மூலம் கூட்ட நெரிசலை சீா்படுத்தவேண்டும். பொதுமக்கள் திரளாக பங்கேற்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அமைச்சரும், ஆட்சியரும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினா்.

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க

பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியிலுள்ள டிஎம்ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில், மழலையா் பிரிவில் செயல்வழி கற்றலின் ஒரு அங்கமாக குக் வித் மாம் எனும் தலைப்பில் புகையில்லா சமையல் போட்டி, பெற்றோா்களுக்கு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருநள்ளாறு, அம்பகரத்தூா்

காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநா் தலையிட கிராமமக்கள் கோரிக்கை

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநா் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மா... மேலும் பார்க்க

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க