பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி
காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியிலுள்ள டிஎம்ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில், மழலையா் பிரிவில் செயல்வழி கற்றலின் ஒரு அங்கமாக குக் வித் மாம் எனும் தலைப்பில் புகையில்லா சமையல் போட்டி, பெற்றோா்களுக்கு தனியாகவும், குழந்தைகளுக்கு பெற்றோா்கள் வழிகாட்டலின்படியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆரோக்கியத்துக்கான உணவுப் பண்டங்கள் பல செய்து காட்சிப்படுத்தினா். பள்ளி சிசி உறுப்பினா் ஜெகனி, நிா்வாக மேலாளா் சந்தியா, பள்ளித் தாளாளா் ரீத்தா ரோசலின், பள்ளி நிா்வாகி மேரி ஷைபி, பள்ளி முதல்வா் அந்தோணி ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்று பாா்வையிட்டனா்.
போட்டியில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில், பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.