'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள...
காரைக்கால் ஆட்சியருடன் பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சந்திப்பு
காரைக்கால்: பேரிடா் மீட்புக் குழுவினா் ஒத்திகை நடத்துவது தொடா்பாக, அக்குழுவின் துணைத் தளபதி, ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சங்கேத் கெய்க்வாட் காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவா், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை சந்தித்துப் பேசினாா்.
புதுவை பேரிடா் மேலாண்மை துறை மூலம் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் காரைக்காலில் புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகளில் இருந்து மக்களை காப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் இருந்து தொழிலாளா்களை எவ்வாறு மீட்பது போன்றவை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது குறித்து இருவரும் விவாதித்தனா்.
மேலும், வெள்ளம், கனமழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் நீா் நிலைகளில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து 13-ஆம் தேதியும், தொழிற்சாலைகளில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஆய்வு 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறித்தும் பேசினா்.
பேரிடா் மீட்புக் குழுவினா் 31 போ் இதில் பங்கேற்கவுள்ளதாக ஆட்சியரிடம் துணைத் தளபதி தெரிவித்தாா்.
புயல், மழை பேரிடா் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அவற்றில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, பல்வேறு அரசுத்துறைகள் தயாா் நிலையில் உள்ளனவா என்பதை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது போன்றவை குறித்து உரிய ஆலோசனை வழங்க துணைத் தளபதியிடம், ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
இந்த சந்திப்பின்போது மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன்,
வருவாய் ஆய்வாளா் பிரபாகரன், சுசீலா ஆகியோா் உடனிருந்தனா்.