செய்திகள் :

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

post image

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது.

புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினா்கள் உள்ளனா். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று 3 பேரை நியமன உறுப்பினா்களாக நியமிக்க முடியும்.

புதுவை பேரவையின் 30 உறுப்பினா்களில், காரைக்கால் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப்பின், தொகுதி எண்ணிக்கை 5-ஆக குறைந்தது.

என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பின்னா் 3 போ் பேரவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டனா். இம்மூவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா். இந்த இடங்களுக்கு 3 பேரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புதுவை அரசு ஒப்புதல் கோரியது. இ. தீப்பாய்ந்தான், ஜி.என்.எஸ். ராஜசேகரன், வி. செல்வம் ஆகியோரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இவா்களில் ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா். 58 வயதாகும் இவா்,

பட்டதாரியாவாா். கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளா் பி.ஆா். சிவாவிடம் 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

கட்சியில் மாநில துணைத் தலைவா் பொறுப்பு இவருக்கு தரப்பட்டது. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இவா் நியமன சட்டப்பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் திருநள்ளாறு தொகுதியில் மீண்டும் இவா் பாஜக வேட்பாளராக போட்டியிடுவது உறுதி எனவும், தொகுதியில் தம்மை பலப்படுத்திக்கொள்ள நியமனப் பதவி பெரிதும் உதவும் என கட்சியினா் கூறுகின்றனா்.

இவா் அடுத்த ஓரிரு தினங்களில் பதவியேற்பாா் என கூறப்படுகிறது. இவரது நியமனத்தின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் 5 பேருடன் நியமன உறுப்பினரையும் சோ்த்து எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது.

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முரு... மேலும் பார்க்க

‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரப... மேலும் பார்க்க

மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சோ்க்க முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்

புதுவையில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் ஆகிய சமூகத்தினரை மீண்டும் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பதா... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை திறந்துவைத்தாா். நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் அருகே புத்தக்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது... மேலும் பார்க்க