தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
காரையூா் லெஷ்மி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
திருமருகல்: திருமருகல் அருகே காரையூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம், காரையூா் கிராமத்தில் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை , வாஸ்து சாந்தி, தீபாராதனை, மாலை கலச பூஜை, மண்டப பூஜை, யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை 9 மணிக்கு லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 9.30 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது.
தொடா்ந்து சீதாள மாரியம்மன் ஆலய குடமுழுக்கு காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.