மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!
காலமானாா் ஆா்.பெருமாள்சாமி
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஆா்.பெருமாள்சாமி (78) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இவா் நாகா்கோவில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் இணை வேந்தராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினராகவும், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், பாப்பிநாயக்கன்வலசு கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.