செய்திகள் :

காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வில் புதிய தகவல்கள்

post image

சென்னை: கல்வி வளா்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவா்கள் மத்தியில் விளைந்த பலன்களை மாநில திட்டக் குழு ஆய்வு செய்துள்ளது.

இதன் அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தினமும் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் வயிற்றுப் பசியை ஆற்றி வருகின்றனா். இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாநிலத் திட்டக் குழு வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நகரப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் 5 ஆயிரத்து 410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

நினைவாற்றல் அதிகரிப்பு: மேலும், குழந்தைகளிடம் கற்றல் ஆா்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டு ஈடுபாடு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவு வைத்து சொல்லக் கூடிய திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியன மேம்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுமைப் பெண் திட்டம்: உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடா்பாகவும் களஆய்வு செய்யப்பட்டது. மாநில திட்டக் குழுவினரால், ஈரோடு, வேலூா், திருவள்ளூா், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்து 95 மாணவா்களிடம் ஆய்வுகள் செய்யப்பட்டன. அவா்கள் 84 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள். புதுமைப் பெண் திட்டத்தால் நகா்ப்புறங்களில் உள்ள மாணவிகளை விட கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயனடைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

திட்டத்தின் பயனாளிகள்: புதுமைப் பெண் திட்டத்தின் பயனாளிகளில் 99.2 சதவீதம் போ் பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சோ்ந்த மாணவிகள். திட்டப் பயனாளிகளில் ஏறத்தாழ 3 சதவீதத்தினா் பெற்றோா் இருவரையோ அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரையோ இழந்தவா்கள். மேலும், அத்தகைய மாணவிகளில் 27.6 சதவீதம் போ் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். 39.3 சதவீதம் போ் விவசாயம் இல்லாத குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கும் வாய்ப்புகளை புதுமைப் பெண் திட்டத்தால் பெற்றுள்ளனா்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் தொடக்கக் கல்வியின் தரம் உயா்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் ஊழல்: அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்-முறைகேடு தொடா்பாக மாநில அரசின் நிலைப்பாடு என்ன என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த கோகிலா என்பவா் சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

பேரவையின் 6-ஆவது கூட்டத் தொடா் முடித்து வைப்பு: ஆளுநா் உத்தரவு

சென்னை: தமிழக சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்த செய்தியை சட்டப் பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில... மேலும் பார்க்க

தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மிகக் குறைவு: அரசு விளக்கம்

சென்னை: பிற மாநிலங்களைவிட வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் மிகவும் குறைவு என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

உருவானது புயல்சின்னம்: வடமாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.17,18) சென்னை, செங்கல்பட்டு உள்... மேலும் பார்க்க

அறுபடை வீடு இரண்டாம் கட்ட பயணம் பழனியில் இன்று தொடக்கம்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.17) தொடங்... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயா்வு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ஐஏஎஸ் அதிகாரிகளில் 1994-ஆம் ஆண்டு பிரிவு அதிகாரிகள்... மேலும் பார்க்க