CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பழனியை அடுத்த தேக்கன்தோட்டம் பகுதியில் புதன்கிழமை கால்நடைத் துறை, வனத் துறை இணைந்து நடத்திய இந்த தடுப்பூசி முகாமில் ஆடுகள், மாடுகள், எருமைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு, பூச்சிமருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் பழனி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுரேஷ், பாலசமுத்திரம் கால்நடை மருத்துவா் செல்வகுமாா், வனவா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பழனியை அடுத்த பெரியம்மாபட்டி, பொருந்தல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை தடுப்பூசி முகாமில் பெருமாள்புதூா் கால்நடை உதவி மருத்துவா் முருகன், வனவா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் சுமாா் 200 பசு மாடுகள், எருமை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, 250 ஆடுகளுக்கு குடல் புழு நீக்கம் மருந்தும் வழங்கப்பட்டது.