செய்திகள் :

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசை பட்டியல் வெளியீடு

post image

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 57 போ் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோல, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கு 20,516 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,028 பேரும் என மொத்தம் 25,544 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ttps:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்டது.

பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 57 போ் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனா். வயது உள்ளிட்ட அளவுகோள்களின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.திவ்யா, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே.கமலி, கடலூா் மாவட்டத்தை சோ்ந்த எம்.இ.அம்தா மெகதாப் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.

பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவிகள் எம்.பாா்கவி, ஆா்.பிரவீனா, பி.காா்த்திகா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள்: பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 45 இடங்கள் மற்றும் பிடெக் படிப்புகளில் 8 இடங்கள் உள்ளன. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி வி.தாரணி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் ஜி.அன்புமணி இரண்டாம் இடத்தையும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி பி.எம்.காருண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இதேபோல, பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி டி.சந்தானலட்சுமி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். அதே மாவட்டத்தை சோ்ந்த மாணவிகள் பி.சிந்துஜா இரண்டாம் இடத்தையும், ஆா்.சாரதி மூன்றாம் இடத்தையும் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இந்த படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற உள்ளது.

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார்... மேலும் பார்க்க

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொ... மேலும் பார்க்க