அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை
`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?
அதிபர் ஆவதற்கு முன்பும் சரி... பிறகும் சரி... ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர படாதபாடுப்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஆனால், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், புதினை பயமுறுத்த 'வரி' என்கிற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கிறார்?
நேற்று அவர், '50 நாள்களுக்குள், போரை நிறுத்துவதற்கான எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என்றால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். மேலும், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீதும் வரி விதிக்கப்படும்.
நான் வரியை பல விஷயங்களுக்காக பயன்படுத்தி உள்ளேன். அது போரை நிறுத்துவதில் சிறப்பாக பங்காற்றுகிறது" என்று கூறியுள்ளார்.

பட்டியலில் இடம்பெறாத ரஷ்யா
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்த பரஸ்பர வரி பட்டியலில், முக்கால்வாசி உலக நாடுகளே இருக்க, ரஷ்யா மட்டும் 'மிஸ்' ஆகியிருந்தது.
ட்ரம்ப் புதினை சாஃப்டாகத் தான் கையாண்டு வந்தார். ஆனால், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் இப்போது வரை பிடியே கொடுக்கவில்லை.
அதனால், தற்போது புதினுக்கு ட்ரம்ப் 50 நாள்கள் காலக்கெடு கொடுத்துள்ளார். இதற்குள் புதின் எதாவது சாதகமான முடிவு எடுக்க வேண்டும்.
இந்தியாவிற்கு பிரச்னை
இல்லையென்றால், ரஷ்யா உடன் சேர்த்து, இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளும் பாதிக்கப்படும். காரணம், இந்த நாடுகள் ரஷ்யா உடன் வணிகம் செய்துகொண்டிருக்கிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியப்போது, அதை முடிவுக்கு கொண்டு வர, மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதித்தது.
இதனால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, அதன் கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய தொடங்கியது.
ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால், இந்த இறக்குமதிகளுக்கு முற்றுப்புள்ளி உண்டாகலாம்.