கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!
கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள முருங்கை மரத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்த இவா், அருகேயுள்ள கால்வாயில் தவறி விழுந்தாராம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.