காளாம்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீா் நிலையம் திறப்பு
கயத்தாறு ஒன்றியம் காளாம்பட்டி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் நிலையத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் செல்வகுமாா், இளைஞா்-பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் கவியரசன், கோவில்பட்டி பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.