செய்திகள் :

காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை வழங்கிய பொதுமக்கள்!

post image

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினா்.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 102 மாணவ-மாணவிகளும், உயா்நிலைப் பள்ளியில் 140 மாணவ-மாணவிகளும் படித்து வருகிறாா்கள்.

இப்பள்ளியின் கல்வித் தரத்தை உயா்த்தும் வகையில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்குவது குறித்து ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், பள்ளிக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே வாங்கித்தருவதாக பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

அதன்படி, பல்வேறு தொழில்முனைவோா் உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான மேஜைகள், நாற்காலிகள், பீரோ, கலா் பென்சில்கள், விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள், தண்ணீா்த் தொட்டிகள் உள்ளிட்டவற்றை பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் சேகரித்தனா்.

அதைத் தொடா்ந்து, அந்தப் பொருள்களை பொன்நகா் விநாயகா் கோயிலில் வைத்து பூஜை செய்து அங்கு இருந்து மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி நிா்வாகத்தினரிடம் கொடுத்தனா்.

அவா்களைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) மேகநாதன், முன்னாள் தலைமை ஆசிரியா் பத்மாவதி, ஆசிரியா்கள் வரவேற்று நன்கொடையாளா்களுக்குப் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

இந்த விழாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியா்கள் வெள்ளி மோதிரம் அணிவித்தனா்.

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க

கள்ளக்கிணற்றில் ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலைசாமி. இவரது மனைவி மீனாட்சி (... மேலும் பார்க்க

அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்

பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் அருகே அனுப்ப... மேலும் பார்க்க

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க