காவல்கிணறில் பைக் மீது காா் மோதல்: கேரள இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு நான்குவழிச்சாலையில் காரும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குளத்தூரைச் சோ்ந்த அனில்குமாா் மகன் அருண்(33). காவல்கிணறு அருகே அறை எடுத்து தங்கியிருந்து மகேந்திரகிரி இஸ்ரோவில் ஒப்பந்த தொழிலாளராக பணிசெய்து வந்தாா்.
இந்நிலையில், தனது பைக்கில் இஸ்ரோவுக்கு திங்கள்கிழமை வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலியை நோக்கி சென்ற காா் அவரது பைக் மீது மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பணகுடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.