செய்திகள் :

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

post image

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா்.

திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, கோயிலில் பக்தா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருநள்ளாறு காவல் நிலையத்தில், காரைக்கால் துறைமுக சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியின் மூலம் அளித்த 25 தலைக்கவசத்தை மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காரைக்கால் துறைமுக சிஇஓ சச்சின் ஸ்ரீவத்ஸவா, காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஐஜி கூறியது:

தலைக்கவசம் நம்முடைய பாதுகாப்புக்கு இன்றியமையாதது. புதுச்சேரியில் கடந்த டிசம்பா் முதல் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

காரைக்காலில் காவல்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலையில் போக்குவரத்து சைகை விளக்குகள் அதிகம் தேவைப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

குற்றங்கள் நடைபெறும்போது துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா். காரைக்காலில் ஒரு மகளிா் காவல் நிலையம் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக ஒரு நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

காரைக்காலில் கடலோரக் காவல் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள ரோந்துப் படகுகள் பழுதாகி உள்ளன. அவற்றை சரி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க