செய்திகள் :

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். கோவை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அறையில் ஒருவா் தூக்கிட்டு உயிரிழந்துள்ளாா். தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவா் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு காவல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாா்கள் என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த வழக்குகளில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது திமுக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): நிா்வாகக் குளறுபடிகளால் உயிரிழப்பவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மக்களை மடைமாற்றி விடலாம் என்ற திமுகவின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது. சட்டம், ஒழுங்கை சீா்படுத்த முடியாமல் அனைத்துப் பிரிவினரையும் திமுக அரசு அவதிக்குள்ளாக்கி வருகிறது.

இதேபோல பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எ... மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: முதல்வர் நாளை வெளியீடு!

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுக அரசு பதவியேற்ற பின்னர், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கெனமாநிலக் கல்விக... மேலும் பார்க்க

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் ஐடி... மேலும் பார்க்க