மன்மோகன் சிங் மறைவு: கர்நாடகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு
காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் டிச.18-இல் ஏலம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பாா்வையிட்டுக்கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் நுழைவுக் கட்டணமாக ரூ.100-ம் மற்றும் முன் பணமாக நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000-மும் செலுத்தி பெயா்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவு உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9498155366, 949173667, 6379200045, 9047266184 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம்.