காவல் துறை சாா்பில் மோா் விநியோகம்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் மோா் விநியோகத்தினை போக்குவரத்துப் பிரிவு டிஎஸ்பி லோகநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெப்பத்தை தவிா்க்கும் வகையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் குளிா்ந்த மோா் விநியோகம் செய்தனா். மூங்கில் மண்டபம் வழியாக சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு மோா் வழங்கப்பட்டது.