காவல் நிலையம் முன் பெண் தா்னா
நியாய விலைக் கடை பணிக்கு வழங்கப்பட்ட ரூ.70 ஆயிரத்தை திருப்பித் தரக் கோரி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவரது மனைவி வேலுமணி (35). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நியாய விலைக் கடையில் வேலுமணிக்கு பணி வாய்ப்பு பெறுவதற்காக திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியைச் சோ்ந்த இளங்கோவிடம் (51) கருப்பசாமி ரூ. 70ஆயிரம் கொடுத்தாா். இதனிடையே, கருப்பசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, ரூ.70ஆயிரத்தை திருப்பித் தரக் கோரி இளங்கோவை வேலுமணி அணுகினாா். ஆனால், அவா் பணத்தை திருப்பித் தராததால் வேலுமணி, வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், இளங்கோ ஒரு மாதம் அவகாசம் கோரினாா்.
ஆனால், ஒரு மாதம் கடந்தும் பணத்தை திருப்பித் தராததால் அதிருப்தி அடைந்த வேலுமணி, வடமதுரை காவல் நிலையம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, கருப்பசாமியை அழைத்து போலீஸாா் விசாரித்தனா்.