செய்திகள் :

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிப்பு

post image

மேட்டூர்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது.

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நவம்பர் 19 ஆம் தேதி வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்கு பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிககு 500 கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது பாசனப்பகுதிகளில் பெய்த மழை தனிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு பாசன தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 5,000 கன அடியாகவும், இரவு வினாடிக்கு 10,000 கனஅ டியாகவும் அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பிய நிலையில் இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு நாள்களுக்குப் பிறகு குறையத் தொடங்கியது.

அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 120 அடியிலிருந்து 119.76 அடியாக குறைந்தது. ணையின் நீா்வரத்து வினாடிக்கு 1871 கனஅடியிலிருநது வினாடிக்கு 1992 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.68 டி.எம்.சியாக உள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

யுவன் குரலில் வெளியான அகத்தியா பட பாடல்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி -... மேலும் பார்க்க

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.இத்தொடர... மேலும் பார்க்க

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!

இந்தூரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்ததற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்... மேலும் பார்க்க

நாட்டில் 3 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று!

இந்தியாவில் ஹெச்எம்பிவி தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019-இல் பரவிய கரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ஐந்தாண்டுகளுக்... மேலும் பார்க்க