தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!
ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, கடந்த 10 நாள்களாக இரவில் அந்நாட்டு ராணுவத்தினா் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவா்களுக்குத் தக்க பதிலடி அளித்து வருகிறது.