பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினரை நோக்கி, பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனா்.
இருநாட்டு ராணுவத்தினா் இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூா் பகுதிகளுக்கு எதிரே, எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில் அந்நாட்டு ராணுவத்தினா் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவா்களுக்குத் தக்க பதிலடி அளித்தது என்று ராணுவ செய்தித்தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.