காஸாவின் எதிர்காலம் இது!நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!
ரஷிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட செய்யறிவு விடியோவை அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், காஸா நகரத்தின் மையத்தில் டொனால்ட் டிரம்ப்புக்கு தங்க நிறத்தில் சிலை, அமைதியான கடற்கரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் மது அருந்துவது, எலான் மஸ்க் நடைப்பயணம் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.