செய்திகள் :

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்! மக்கள் வெளியேற உத்தரவு!

post image

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகளை அழிப்பதற்காக, காஸா மீதான ராணுவ நடவடிக்கைகள் இன்று (செப்.16) அதிகரிக்கப்படுவதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேலின் செய்தித்தொடர்பாளர் அவிசாய் அட்ரீ கூறுகையில், இன்று காலை முதல் காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, காஸா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்து வந்தது.

ஆனால், காஸாவின் தெற்கு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை அதிகரித்துள்ளதால், வடக்கு காஸா மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

As the Israeli military's operations in Gaza are being expanded, Palestinians living there have been ordered to leave immediately.

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டின் செயலாளர் மார்கோ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

இஸ்ரேல் நாட்டில் புதியதாக 481 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகர... மேலும் பார்க்க

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா நகரம் எரிகின்றது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வ... மேலும் பார்க்க

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்தும... மேலும் பார்க்க

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல... மேலும் பார்க்க