காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி
காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 100 பேர் காயமடைந்ததாகவும் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.
வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக பஸ்ஸல் கூறினார். அதே நேரத்தில் அதே பகுதியில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அல்-ஜவாய்தாவின் மையப் பகுதியிலும், தெற்கில் உள்ள கான் யூனிஸிலும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக பஸ்ஸல் மேலும் தெரிவித்தார்.
நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி
இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. தங்களிடம் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.