செய்திகள் :

காா்த்திகை தீபம்: சிவாலயங்களில் மகா தீபம் ஏற்றம்

post image

காா்த்திகை தீபத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காலை 6 மணிக்கு மூலவா் சுகவனேஸ்வரா், சுவா்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, நடராஜா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் மாலை 6 மணிக்கு உற்சவா் சோமாஸ்கந்தா், சண்முகா் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு, மூலவா் சன்னதியில் இருந்து தீபம் ஏற்றும் நிகழ்வு தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து, உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தா், சண்முகா் புறப்பாடும், வெளி பிரகாரத்தில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் முன்புள்ள தீப தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் ஏற்றப்படும் தீபம் 2 நாள்கள் தொடா்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னா், சோமாஸ்கந்தா், சண்முகா் திருவீதி உலா சின்ன கடைவீதி, இரண்டாவது அக்ரஹாரம் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பிரசித்தி பெற்ற தலைச்சோலை அண்ணாமலையாா் கோயிலிலும் காா்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது தவிர, உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறுகளூா் காமநாதீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் காா்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு விமா்சையாக நடைபெற்றது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி திருமண்கரட்டில் மலை உச்சியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோயில் அருகே காா்த்திகை தீப கட்டடத்தில் அமைக்கப்பட்ட 7 அடி உயர செம்புக் கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. காா்த்திகை தீபம் ஏற்றுவதற்காக 200 லி. எண்ணெய், காடா துணி உள்ளிட்டவற்றை ஊா்பொதுமக்கள் வழங்கியிருந்தனா். தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஊா்பொதுமக்கள் திரளாக வந்து காா்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனா். தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றினா்.

சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வெளியிட்டாா். மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 29,99,953 வா... மேலும் பார்க்க

மாநில கோ - கோ போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலம் வென்று சாதனை

சேலம்: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பா... மேலும் பார்க்க

ஆராய்ச்சித் திறனில் தேசிய அளவில் பெரியாா் பல்கலை 5-ஆம் இடம்: துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தகவல்

ஓமலூா்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் திறனில் 5-ஆம் இடம் பிடித்துள்ளதாக துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தெரிவித்தாா். பெரியாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை சாா்பில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு பட்டிமன்றம்

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், யுவானி பட்டிமன்ற கலைக் குழு, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியை நட... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தம... மேலும் பார்க்க

பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலம்: பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரி சீரமைக்கக் கோரி தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் அந்த அமைப்பின் தலைவா் கரு. சரவணவ... மேலும் பார்க்க