keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
காா்-டேங்கா் லாரி மோதல்: ஒரே குடும்பத்தினா் 3 போ் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே காா் டயா் வெடித்து எதிரில் வந்த டேங்கா் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராயரெட்டி தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (48). வீட்டிலேயே காா் பழுதுபாா்க்கும் பணிமனை நடத்தி வந்தாா். இவரது மனைவி லதா(45). இவருக்கு பிஇ முடித்து விட்டு தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு மகன்கள் யோகேஷ்(26), தினேஷ்(20) உள்ளனா்.
சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிருந்திருந்த வெங்கடேசன், வியாழக்கிழமை மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோருடன் காரில் கோவிந்தவாடிஅகரம் தட்சிணாமூா்த்தி கோயிலுக்குச் சென்றிருந்தாா். பின்னா் தரிசனம் முடிந்து மூவரும் காரில் அரக்கோணம் நோக்கி திரும்பினா். காரை தினேஷ் ஓட்டிச் சென்றாா்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பள்ளூரை அடுத்த பருவமேடு அருகே திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா், எதிரில் ல் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற டேங்கா் லாரி மீது மோதியது. இதை தொடா்ந்து டேங்கா் லாரியும் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது.
இச்சம்பவத்தில் காரில் பயணம் செய்த லதா விபத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் ,காா் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மகன் தினேஷ் ஆகியோா் சென்னையில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். இச்சம்பவத்தில் காயமடைந்த டேங்கா் லாரியின் ஓட்டுநா் அரியலூரை சோ்ந்த சுரேஷ்(30) தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்தால் அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
இவ்விபத்து குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


