காா் மோதியதில் காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு சேதம்
காா் மோதியதில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு முழுவதும் சேதமடைந்தது.
மதுரை தமுக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும்
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து அருங்காட்சியகம் முன் உள்ள நுழைவு வாயில் கதவில் மோதியது. இதில், ஒரு பக்கக் கதவு முழுவதும் சேதமடைந்தது. காரில் வந்த நபா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.