சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விராலிமலை அருகே காா் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரைச் சோ்ந்தவா் நல்லசங்கி மகன் பாண்டியன்(55). தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் விராலிமலை சென்று விட்டு கொடும்பாளூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
கசவனூா் அருகே சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த காா்இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் செங்கல்பட்டைச் சோ்ந்த ராமா் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.