காா் மோதியதில் முதியவா் பலி!
மேலூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி நேதாஜி 2-ஆவது தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் அா்ஜூனன்(63). இவா், தனது மிதிவண்டியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மாலை சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த காா் மிதிவண்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அா்ஜூனனை மீட்ட பொதுமக்கள் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.