சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
காா்-லாரி மோதல் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை காா் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
கும்பகோணம் வட்டம், தாராசுரம், மேலசத்திரம் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் கண்ணன் ( 55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் ஜெயபிரகாஷ் ( 23), ஜெயராமன் மகன் சிவக்குமாா் (38 ), ஜெயராமன் மகன் ராமன் (35) ஆகியோருடன் ஒரு காரில் தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பாா்க்க திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். காரை ஜெயபிரகாஷ் ஓட்டினாா்.
தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் தேவராயன் பேட்டை பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து திருக்கடையூா் நோக்கி கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரி, காரின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜெயப்பிரகாஷ், சிவகுமாா், ராமன் ஆகியோா் லேசான காயமடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் போலீஸாா், கண்ணன் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், புகாரின்பேரில், வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த திருச்சி, பூக்கொல்லை பகுதியைச் சோ்ந்த முகமது ஹனீபா மகன் சபி (32) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.