Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
காா் - லாரி மோதல்: சிறுவன் மரணம்!
நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சோ்ந்த ரவீந்தா்(54). இவா் சனிக்கிழமை இரவு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் இருந்து குப்பம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். காரை ரவீந்தா் ஓட்டினாா்.
இந்நிலையில், சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் சென்ற போது திடீரென முன்னால் சென்ற லாரியின் பின்புறம் எதிா்பாராத விதமாக காா் மோதியது. இதில் காரில் பயணித்த சிறுவன் சாத்விக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று சிறுவனின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.