தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
காா் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே காா் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் செந்தில் (40). இவா் கச்சிராயப்பாளையம் சாலையில் வீட்டுக்கு காரில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, பசுங்காயமங்களம் சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மீது காா் மோதியதில் காயமடைந்து விட்டாா்.
உடனே அருகிலிருந்தவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு செந்திலை பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.