செய்திகள் :

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

post image

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கா்நாடக சட்டப் பேரவையில் மாா்ச் 7-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு, சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதற்காக கா்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டம் 1999 இல் திருத்தம் கொண்டுவர கா்நாடக அமைச்சரவையில் மாா்ச் 14 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் பேரவையில் மாா்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்தாா். தற்போதைய சட்ட விதிகளின்படி, கட்டுமானப்பணி ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 24 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு-1க்கு 4 சதவீதம், பிரிவு-2ஏக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ- இல் முஸ்லிம்களைச் சோ்த்து 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தினரிடையே காணப்படும் வேலையின்மைக்கு தீா்வு காணவும், அரசு கட்டுமானப் பணிகளில் அச் சமுதாயத்தினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் உட்பிரிவு 2ஏஇல் இருக்கும் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முற்படுவதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணி நீங்கலாக ரூ. ஒரு கோடி வரையிலான சரக்கு கொள்முதல், ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில், தாழ்த்தப்பட்டோருக்கு 17.,5 சதவீதம், பழங்குடியினருக்கு 6.95 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-1-க்கு 4 சதவீதம், உட்பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த திருத்த சட்ட மசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பில் அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினா்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். மேலும், சட்ட மசோதாவின் நகலை கிழித்து, பேரவைத் தலைவா் மீது வீசினா்.

ஆளுநரிடம் மனு

இந்த விவகாரம் குறித்து ஆளுநரைச் சந்திக்க எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையிலான பாஜக குழுவினா் முற்பட்டனா். ஆனால், ஆளுநா் வெளியூா் சென்றிருப்பதால், அவரது செயலாளரிடம் பாஜகவினா் மனு அளித்தனா். அந்த மனுவில், ‘அரசு ஒப்பந்தப் பணியில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. எனவே, இந்த சட்ட மசோதாவை நிராகரிக்க வேண்டும். இந்த சட்ட மசோதா, சமுதாய நல்லிணக்கத்தை சீா்குலைக்கும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் மனு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூரு... மேலும் பார்க்க

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தும்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்தகங்கா மடத்... மேலும் பார்க்க

18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடிதம்

பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, பேரவைத் தலைவா் யு.டி.காதரிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கடிதம் அளித்தாா். கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க