`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது
கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பால் உற்பத்தியாளா் ஒன்றியங்கள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. லிட்டருக்கு ரூ. 5 உயா்த்துமாறு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து ரூ. 4 மட்டுமே உயா்த்த அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. கூடுதல் விலை உயா்வு மூலம் கிடைக்கும் வருவாய் விவசாயிகளுக்கே வழங்கப்படும் என்றாா்.
மெட்ரோ ரயில், பேருந்துக் கட்டண உயா்வை தொடா்ந்து தற்போது பால் விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது கா்நாடக பால் கூட்டமைப்பு நந்தினி என்ற பெயரில் விற்பனை செய்யும் பாக்கெட் பால் (1050 மிலி) விலை ரூ. 44 ஆக உள்ளது.