மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு
நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணை பரிமாற்றத்தை காணொலி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வை, சிக்கலில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, பிரதமரின் உரையை கேட்டனா்.
தொடா்ந்து, பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநா்கள் கோ. சந்திரசேகா், யூ. ஹினோ பொ்னாண்டோ, வே. கண்ணன், அ. மதிவாணன், க. ரகு, மா. அறிவழகன் ஆகியோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.
இந்நிகழ்வில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வ. செந்தில்குமாா், மீன்வள பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநா் அ. கோபாலகண்ணன், பண்ணை மேலாளா் ரெ. வேதரெத்தினம், திட்ட உதவியாளா் வீ. ஞானபாரதி, கணினி திட்ட உதவியாளா் கோ. ரம்யா, உதவியாளா்கள் சுமதி, காா்த்திக், லாவண்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.