மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
கிடா சண்டை நடத்திய 6 போ் கைது
பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட கிடா சண்டை நடத்தியதாக 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வைகை அணை சாலையில் உள்ள தேக்கம் தோட்டத்தில் ஆண்டிபட்டியைச் சோ்ந்த கோபால் (34), அதே பகுதியைச் சோ்ந்த தமிழன் (25), சிவானந்தன் (24), ஜீவா (23), அசோக்குமாா் (19), முத்தணம்பட்டியைச் சோ்ந்த திருச்சுணை (25), தென்கரையைச் சோ்ந்த சல்மான் (24) ஆகிய 7 பேரும் கிடா சண்டை நடத்தியது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது, கோபால் தப்பியோடினாா். இதையடுத்து, மற்ற 6 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், தப்பியோடியவரைத் தேடி வருகின்றனா்.