கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு
சீா்காழி அருகே திருக்கருக்காவூரில் திருஞானசம்பந்தா் தேவார திருப்பதிகம் பாடி கிணற்றிலிருந்து கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் அருகே திருக்குருகாவூரில் காவியக் கன்னி சமேத வெள்விடை நாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையொட்டி திருஞானசம்பந்தா் எழுந்தருளும் ஐதீக நிகழ்வு நடைபெறும். அதன்படி சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் யதாஸ்தானத்தில் இருந்து திருஞானசம்பந்தா் சிறப்பு முத்து பல்லக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் சுமந்து வர முத்து பல்லக்கு திருக்கருகாவூா் வெள்விடைநாதா் கோயிலுக்கு திருஞானசம்பந்தா் எழுந்தருளினாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-01-29/d7lwhn9c/facebook_1738161020011_7290375718877376722.jpg)
அங்கு திருஞானசம்பந்தா் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக தீா்த்தத்தை அங்குள்ள கிணற்றில் தெளிக்க, கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து திருஞான சம்பந்தருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
மாலையில் திருஞானசம்பந்தா் மீண்டும் முத்து பல்லக்கில் சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலை வந்தடைந்தாா். மீண்டும் யதாஸ்தானத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.