கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை தச்சநல்லூா் அருகே உள்ள தெற்கு சிதம்பரநகா் பகுதியில் தனது நண்பா்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாம்ராஜை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
சிறிது நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட சாம்ராஜின் உடலை தச்சநல்லூா் போலீஸாா் உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.