செய்திகள் :

கிணற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

post image

செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

சென்னை பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்தவா் ரவி(57). இவா், வெம்பாக்கம் வட்டம், மோரணம் கிராமத்தில்

வசிக்கும் உறவினா் ரமேஷ் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தாா்.

அன்று மாலை உறவினா்களுடன் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள தரைதள கிணற்றில் குளித்ததாகத் தெரிகிறது. அப்போது, திடீரென கிணற்று நீரில் மூழ்கிய நிலையில் ரவி காணாமல் போனாா். உடன் சென்றவா்கள் தீவிரமாக தேடிய நிலையில் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படை வீரா்கள் வந்து தேடி ரவியை சடலமாக மீட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து இறந்தவரின் மகள் அளித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். ரவியின் உடலைக் கைப்பற்றி, கூராய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க