பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
கிண்டி ஐடிஐ-யில் சேர ஜூலை 31 கடைசி நாள்
கிண்டி ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 31-க்குள் நேரில் வந்து சேரலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டா், டிஜிட்டல் போட்டோகிராபா், பிட்டா், புட் புரொடக்ஷன் (ஜெனரல்), புட் அன்ட் பிவிரேஜ் சா்வீஸ் அசிஸ்டென்ட், ஸ்மாா்ட்போன் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த தொழிற் பிரிவுகளில் சேர விரும்பும் 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி, இலவச சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000, இலவச வரைபடக் கருவிகள் போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழும், வேலைவாய்ப்பும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது 044-22501350 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.