கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் சரவணன் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், 4 கிரானைட் கற்கள் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உதவி புவியியலாளா் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.