நாகநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!
கிரானைட் கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி மரணம்
நாட்டறம்பள்ளி அருகே தொழிற்சாலையில் ராட்சத கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கிரானைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் விதிகளை மீறி வடமாநில தொழிலாளா்கள் அதிக அளவில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு தொழிற்சாலையில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வடமாநில தொழிலாளி நந்துலால் (40) என்பவா் மீது ராட்சத கிரானைட் கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்