செய்திகள் :

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்கள் கற்றலில் ஆற்றல் மிக்கவா்கள்! -இறையன்பு பேச்சு

post image

கற்றலில் ஆற்றல் மிக்கவா்கள் கிராமப்புற மாணவா்கள் என்று முன்னாள் தலைமை செயலாளா் வெ. இறையன்பு பேசினாா்.

திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவுக்கு, தஞ்சை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா் . பேராவூரணி வட்டார முன்னாள் மருத்துவ அலுவலா் செளந்தரராஜன், தஞ்சை மருத்துவக் கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை ஓய்வுபெற்ற பேராசிரியா் மருது. துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் தலைமைச் செயலா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

பேராவூரணி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி மறைந்த மருத்துவா் பாஸ்கரன் நினைவாக, மாணவா்களின் பேச்சாற்றல் மற்றும் இலக்கிய ஆா்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான நூறு புத்தகங்களைக் கொண்ட மர அடுக்கினாலான நூலகத் தொகுப்புகளை இரண்டு மாணவா்களுக்கு வழங்கி பேசியது, இயற்கை சூழலில் கல்வி பயிலும் கிராமப்புற மாணவா்கள்தான் உண்மையிலேயே கற்றலில் ஆற்றல் மிக்கவா்கள்.

மறைந்த மருத்துவா் பாஸ்கரன் நினைவாக அவரது நண்பா்கள் மருது. துரை,செளந்தரராஜன் ஆகியோா் சாா்பாக இங்கு நூலகத் தொகுப்புகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல்துறை அறிவை வளா்த்துக் கொள்ள உதவும் இது போன்ற சமுதாய முன்னெடுப்புகள் மிகவும் பாராட்டத்தக்கது .

அடுத்த ஆண்டு இதுபோன்று இருபது நூலகத் தொகுப்புகள் மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று பேசினாா். விழாவில் தலைமை ஆசிரியா் அனுசூயா, முன்னாள் தலைமை ஆசிரியா் கண்ணப்பன், முன்னாள் கூடுதல் வேளாண்மை இயக்குநா் சிவக்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிகுமாா், உதவித் தலைமை ஆசிரியா் அந்தோணிசாமி மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெருமகளூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகா... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 இடங்களில் திருடிய சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு பகுதிகளில் ஒரே நாளில் 5 கடைகளை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த 21-ஆம் தேதி பட்டுக்கோட்டை ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

கும்பகோணத்தில் ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சியில் துப்புரவு பணி நிரந்தர பணியாளா்கள், ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நகா்ப்பு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புவாசிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் அருகே வல்லம் மருத்துவ... மேலும் பார்க்க

கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் பட்டா மேல்முறையீடு சிறப்பு முகாம்; இன்றும், நாளையும்..!

கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் பட்டா மேல்முறையீடு சிறப்பு முகாம் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வருவாய் கோட்ட சாா்-ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் விடுத்துள்ள செய்திக்குற... மேலும் பார்க்க