Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி நகா், மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன், சுந்தரபாண்டியன் நகா், ஜெபமாலைபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.