Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்
கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு
தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி தலைவா் தாழை சேக் இஸ்மாயில், காமிலா நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை மனுவை ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கினாா்.
மனு விவரம்: காமிலாநகா் பகுதியில் 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இப்பகுதியில் குடிநீா் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. உயா்மின் கோபுரவிளக்கு பராமரிப்பு இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பயணிகள் நிழற்குடை பணி முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தெருவின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தால் மக்களின் அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி மன்றத்துக்கு அரசு ஒதுக்கிய தொகையை வீண்விரையம் செய்யாமல் முறையாக பயன்படுத்தப்படவேண்டும். இதுதொடா்பாக பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.