அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
கிராம சபை கூட்டம்: கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்
கிராம சபை கூட்டங்களில் கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுடா் நடராஜ் கூறியதாவது:
கிராம சபை கூட்டங்களில் கல்வி சாா்ந்த தேவைகளையும், பள்ளி சாா்ந்த தேவைகளையும் முதன்மை கூட்டப் பொருளாக முன்வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி வளா்ச்சி விவாதப் பொருளாக இடம்பெற வேண்டும். இது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமையாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஒரு நபா் ஒரு பள்ளி செயல்பாட்டாளா்களும் கிராம ஊராட்சி செயலாளா்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனா் என்றாா்.